சுதந்திரமடைந்து 68 வருடங்களில் 64 வருடங்கள் ஆட்சிசெய்தவர்கள் வெறும் 4 குடும்பங்களே

0
91

7e774c58eb70722e199d0b5cf7618026_XLஹொரகொல்ல‬ வளவ்வ – (Bandaranayake, Srimavo, Chandrika) – 27 வருடங்கள்

‪போதலே‬ வளவ்வ – (D.S. & Dudley Senanayake ) – 14 வருடங்கள்

‪கொள்ளுபிடிய‬ வளவ்வ – ( J.R. & Ranil ) – 14 வருடங்கள்

‪மெதமுலன‬ வளவ்வ – (Mahinda & Co.) – 10 வருடங்கள்

இந்த சொற்பக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரென்றால் வெறும் 10% ஆனா இந்நாட்டின் முதலாளித்துவ அதிகார வர்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களது ஆட்சியின் குறிக்கோள் ஒன்றுதான். அது 10% ஆன முதலாளிமாரின் நலன்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதும் அதனை மேலும் வளர்க்க ஏதுவான சூழலைப் பேணிக்கொள்வதுமே.

‪ஏன்‬ அவர்கள் ஆட்சியைப் பிடிப்பதில் முழுக்கவனத்தோடு இருக்கின்றனர். அவர்களது இலக்கு என்ன?

தாங்கள் மக்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தை பாதுகாத்துக்கொள்ளவும், மேலும் மேலும் பணத்தைச் சேர்ப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அவற்றை நிலைப்படுத்திக்கொள்வதுமாகும்.

‪அவர்களது‬ இலக்கின் மூலம் மக்களுக்கு நடந்தது என்ன ?

சாதாரண மக்கள் மேலும் மேலும் சுரண்டப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

‪இதில்‬ பொது மக்களான‌ எமது போராட்டம் என்னவாக இருக்க வேண்டும் ?

இந்த 10% ஆன கொள்ளைக்கார முதலாளித்துவ வர்கத்திடமிருந்து 90% ஆன சாதாரண பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதே எமது போராட்ட இலக்கு.

‪ஆனால்‬ யார் உண்மையில் அதிகாரத்தில் இருக்கின்றனர் ?

இது சிங்கள பொதுமகனுக்கான ஆட்சியா ?
இது தமிழ் பொது மகனின் ஆட்சியா ? இரண்டுமே கிடையாது.

இது மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டைச் சுரண்டும் 10% ஆன முதலாளிமார் வர்க்கத்தின் ஆட்சி.

இதற்குள் சிங்கள முதலாளிமார் இருக்கின்றனர், தமிழ், முஸ்லிம் முதலாளிமார் இருக்கின்றனர். அவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர்.

‪‎அப்படியானால்‬ இங்கு உண்மையான மோதல் யாருக்கிடையில் நடக்கிறது ?

சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையிலா ?

இது அந்த முதலாளித்துவ வர்க்கம் எங்கள் மீது திணித்த மோதல். முதலாளித்துவ வர்க்கத்திற்கு தேவையானதும் இப்படியான இன மோதல் சூழல்தான். அவர்களுக்கு ஒரு நாளும் இன ஒற்றுமை அவசியமில்லை. அப்படி ஏற்படுவது அவர்களது சுரண்டலுக்கு பேராபத்தானது.

எனவேதான் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்க இனவாதத்தை அவர்கள் இருபுறமும் விதைக்கின்றனர். அதைப் பாதுகாக்க இன மோதல்களை தூண்டிவிடுகின்றனர்.

‪‎இன்று‬ மக்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு துடிப்பது எதற்காக ?

நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கா ?
மக்களுக்கு சம உரிமையைப் பெற்றுக்கொடுக்கவா ?
எதுவும் கிடையாது, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை நிறுவி தங்கள் ஊழல் சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே.

-MP-

LEAVE A REPLY