மிளகாய் பஜ்ஜி

0
212

sl4434என்னென்ன தேவை?

பஜ்ஜி மிளகாய் – 5 முதல் 6,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மிளகாயை கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். மிளகாய், எண்ணெயை தவிர்த்து, மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மிளகாயை மாவில் தோய்த்து, மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

LEAVE A REPLY