ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் உடைகள், லேப்டாப்கள் திருட்டு

0
255

201608012121337670_Rio-Olympics-2016-Laptop-shirts-stolen-as-Australian_SECVPFஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டு இருக்கும் பிரத்யேக ஒலிம்பிக் கிராமத்தின் பணிகள் முழுமையாக முடியவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது

இந்த நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் நடந்த திருட்டு வீரர்கள் இடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒலிம்பிக் கிராமத்தில் 5-வது தளத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய சைக்கிளிங் அணியின் அதிகாரியின் லேப்டாப் திருட்டு போய் விட்டது. அத்துடன் ஆஸ்திரேலிய அணியினரின் சீருடைகளும் களவு போய் இருக்கிறது. இந்த தகவலை ஆஸ்திரேலிய அணியின் தலைமை அதிகாரி கிட்டி ஷில்லெர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அறையை விட்டு வெளியே வந்தனர். இந்த சம்பவத்தின் போது, திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY