(Poem) அந்த அப்பம்

0
22

(Mohamed Nizous)

அப்ப தின்ற
அப்பம் -இன்னும்
ஜீரணியாமல் இருப்பதால்
பேரணியாய் செல்கிறார்
பெரிய மீசைக்காரர்.

பாதி அப்பத்துடன்
பதவிக்கு வந்தவர்
போதுமென்ற மன்மே
பொன் செய்யும் மருந்தென
ஏதும் செய்யாமல்
இருக்கின்றார் சும்மா.

அப்பத்தை பெட்டியுடன்
அபகரிக்க யானை
அப்பப்ப தந்திரத்தை
அப்ளை செய்கிறது

அப்பச்சியின் பக்கம்
அப்பம் உண்டவரே
இப்பக்கம் வந்து
இருக்கிறார் அமைச்சராய்

அப்பாவி மக்களுக்கு
அப்பம் இப்ப
அப்பப்ப புளிக்கிறது.
அப்பத்தால் இங்கு
அதிகாரக் கட்சி
அப்படியே மாறினாலும்
அப்பவும் இப்பவும்
அப்படியேதான் வாழ்வு என
அப்பாவிச் சனம்
அலுத்துக் கொள்கிறது.

LEAVE A REPLY