இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பாகும்: முபீன்

0
154

(விசேட நிருபர்)

7efed7b3-79e4-49ca-ab8f-3f0ef1995ca2இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பாகும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினால் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேலைத்திட்டத்தின் கீழ் (1.8.20106) திங்கட்கிழமை காத்தான்குடியில் மரம் நடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் இன்று இந்த நாட்டிலுள்ள அரசியல் சூழல்; என்பது இனத்துவ அரசியல் சூழலாகும். இந்த இனத்துவ அரசியல் சூழலில் சிங்களவர்கள் சிங்களவர்களைப்பற்றி சிந்திப்பது போன்று தமிழர்கள் தமிழர்களைப் பற்றியும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் முஸ்லிம்களைப்பற்றியும் சிந்திக்கின்றனர்.

ஜெனீவா கூட்டத்தொடரிலும் கூட இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டுமென்ற அடிப்படையில் பொறுப்புக் கூறுகின்ற அம்சம் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்பதில் அக்கறையோடு இருக்கின்றார்கள். தற்போது பாதையாத்திரை செல்கின்ற மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் இந்த நாட்டை சீரழித்தவர்கள்.

இந்த நாட்டை சீரழித்தவர்கள்தான் மீண்டும் இந்த நாட்டை சீரழிப்பதற்கு கண்டியிலிருந்து பாதையாத்திரை செல்கின்றனர். இந்த பாதையாத்திரை மக்களுக்குள் எடுபடவில்லை. இந்த பாதையாத்திரைக்கு பின்னாலுள்ள அத்தனை பேரும் இனவாதிகளாகும். இந்த நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம்தான் சொந்தம் தமிர்களும் முஸ்லிம்களும் வந்தேறு குடிகள்தான் என்று சொல்கின்றவர்கள்தான் பாதையாத்திரை செல்கின்றனர்.

இன்றுள்ள நிலைமைகளை நாம் சாதகமாக பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் கொடுக்க கூடாது என்று சிங்கள சமூகத்திற்குள் அன்று சொன்ன சிங்கள தலைவர்கள் இன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதையாவது கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

வடமாகாண ஆளுனர் ரெஜனல்குரோ அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என நீண்டாகாலமாக குரல் கொடுத்து வருகின்றார். இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பாகும். 1971ம் ஆண்டு ஜே ஜெயவர்த்தவினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு தமிழர்களையும் முஸ்லிம்களையும் புறந்தள்ளி இந்த யாப்பு உருவாக்கப்பட்டதன் காரனமாகத்தான் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நாட்டின் இனப்பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் கருத்தறியும் குழு அமைக்கப்பட்டு ஐய்யாயிரத்துக்குமேற்பட்ட அரசியல் யாப்பு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் அரசியல் யாப்பை மாற்ற வேண்டுமென்று மக்கள் கூறுகின்றார்கள். அஸ்கிரிய பீடாதிபதி கூட இந்த நாட்டு அரசியல் யாப்பை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கின்றார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள வீட்டுக்கு வீடு மரம் நாட்டும் இந்த வேலைத்திட்டம் தொடர்;ச்சியான ஒரு வேலைத்திட்டமாகும்.

மரம் என்பது நமக்கு முக்கியமானதாகும் நமது சூழலை பசுமையாக வைத்திருக்கும். இந்த மரத்தினை வீட்டுக்கு வீடு நடுவதுடன் இளைஞர்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் உள்வாங்குவது அவர்களுடைய விபரங்களை பெறுவது போன்ற நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற் கொள்ளவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY