காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி

0
144

(விசேட நிருபர்)

cbeeb922-be39-4b95-ac1c-d60b76e7d2d9காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 27வது ஆண்டு நிறைவையொட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது.

பத்து ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானம் மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.

12 கழகங்கள் பங்கு பற்றிய இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகமும் காத்தான்குடி மதீனாஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

இதன் இறுதிப் போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் 31.7.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மதீனாஸ் அணி பத்து ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி அக்ரம் அணி 7 விக்கட்டுக்களை இழந்து 9வது ஓவரில் 54 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரனாக காத்தான்குடி அக்ரம் அணியின் சார்பில் எம்.எம்.எம்.பாஹீம் தெரிவு செய்யப்பட்டார்.

இதன் பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் முக்கியஸ்தர்களான ஏ.எல்.சமீம் மற்றும் எம்.லாபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அதன் முக்கியஸ்தர்களுக்கும் நிளைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.

8f82963a-713c-430a-9fa3-ba4c8a1bd479

613a9dad-a141-4249-b0dc-1158c5b4a2f2

7089a6d3-cd81-4828-87b7-d17c948adcc2

60484bce-c627-48e5-938c-68dea81cf50e

610046fc-3404-4334-92b7-e1048759b736

LEAVE A REPLY