இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் மெரின் சூ கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு

0
116

(விசேட நிருபர்)

28b6a2ea-6ab6-41f8-bb44-70832db58bf2இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் மெரின் சூ (1.8.2016) திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபீஸ் நசிர்; அகமடை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கிழக்கு மாகாண சபையினால் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தூதுவர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் உல்லாசத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய பிரான்ஸ் நாடு உதவி வழங்குமெனவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முந்தனையாறு வாவியை அபிவிருத்தி செய்யவும் பிரான்ஸ் நிதியுதவி செய்வதாக பிரான்ஸ் தூதுவருடனான சந்திப்பின் போது பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த முந்தனையாறு வாவியை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணாமலிருக்கும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணியில் செய்கை பண்ணமுடியுமெனவும் அதற்கு இந்த முந்தனையாறு வாவி நீரைப் பெற்றுக் கொள்ளமுடியுமெனவும் முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபீஸ் நசீர் அகமட் இதன் போது மேலும் தெரிவித்தார்.

50aa4ff3-507c-40bd-9cd1-c094d43a688b

74180d24-e33d-40a1-837c-3938dca6685e

LEAVE A REPLY