சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேளைத்திட்டம்

0
152

(ஏ.எல்.டீன்பைரூஸ்/பழுலுல்லாஹ் பர்ஹான்)

4a6b01da-f3ba-422c-a6ad-57958a351eb2சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேளைத்திட்டம் கட்சியின் காத்தான்குடி பிரதான காரியாலயத்தில் இன்று (01.08.2016 திங்கள்) காலை 90.30 மணிக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.என்.எம்.முபீன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜம்இய்யத்தல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.கையூம் (ஷர்கீ) அவர்களும், உலமாக்களான ஜ.எம்.இப்றாஹீம்எம். செய்யது புஹாரி ,முகம்மது பைரூஸ்(பலாஹி), காத்தான்குடி சம்மேளன மூத்த உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் லெத்தீப், மட்டக்களப்பு மத்தி ஆரம்ப கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம்.இப்றாஹீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

b59cae1d-5953-41ad-8d14-cceaa09d5c66இந்நிகழ்வினை தொடர்ந்து வீட்டுக்கு  வீடு மரம் நடல் என்ற அடிப்படையில் புதிய காத்தான்குடி கடற்கரை வீதி, விடுதி வீதி, அப்றார் வீதீ, கர்பலா வீதி, புதிய காத்தான்குடி 6ம் குறுக்கு வீதி ,காத்தான்குடி 1ம் குறிச்சி சாவியா வீதி,காத்தான்குடி 2 கபுறடி வீதி, சின்ன ஓடாவியார் வீதி,ஏ.எச்.எம்.பௌசி மாவத்தை, பிரதான வீதி எச்.என்.பீ ஒழுங்கை ஆகிய இடங்களிலும் மேற்படி மர நடும் நிகழ்வுகள் யூ.எல்.என்.எம்.முபீன் தலைமையில் நடை பெற்றது.

LEAVE A REPLY