இந்தோனேஷிய உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர்

0
187

ranilஇந்­தோ­னே­ஷி­யாவில் இடம்­பெ­ற­வுள்ள 12 ஆவது உலக இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்­து­கொள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இன்று (01) இந்­தோ­னே­ஷியா பய­ண­மா­க­வுள்ளார்.

அத்­துடன் அம்­மா­நாட்டில் விசேட சொற்­பொ­ழி­வொன்­றையும் ஆற்­ற­வுள்ளார்.

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இந்­தோ­னே­சியா செல்லும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்­தோ­னே­சியா ஜனா­தி­பதி ஜொகோ விதொதோ, நிதி­ய­மைச்சர் ஸ்ரீ முர்­யாணி இந்­தி­ரா­வதி மற்றும் கடல்காண் அலு­வல்கள் அமைச்சர் லூதுன்­பின்ளர் உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

12 ஆவது உலக இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டின் ஆரம்பக் கூட்­டத்தில் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க விசேட சொற்­பொ­ழி­வொன்­றையும் ஆற்­ற­வுள்ளார்.

இம்­மா­நாடு இடம்­பெறும் கால­கட்­டத்தில் அதில் கலந்­து­கொள்ளும் மலே­சிய பிர­தமர் நஜிப் துண் அப்துல் ரஸாக், தர்­கிஸ்தான் ஜனா­தி­பதி எமோலி ரஹ்மான், ஜோர்தான் பிரதிப் பிர­தமர் ஜவாட் அல் அநாதி உட்­பட பல்­வேறு நாட்டுத் தலை­வர்­களை சந்­தித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

பிர­த­மரின் இந்­தோ­னே­ஷிய விஜ­யத்தின் போது பிர­த­மரின் பாரியார் பேரா­சி­ரியர் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான கபீர் ஹாசிம், ஏ.எச்.எம். பௌஸி, பிர­தி­ய­மைச்சர் சுஜீவ சேன­சிங்க, பிர­த­மரின் செய­லாளர் சுமன் ஏக­நா­யக, ஐந்து வருட அபி­வி­ருத்தி திட்ட (சர்­வ­தேசம்) பொறுப்­பாளர் அர்­ஜுன மகேந்­திரன், பிரதமரின் மேலதிகச் செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி மற்றும் பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோர் பிரதமருடன் இந்தோனேசியா பயணமாகின்றனர்.

#Vidivelli

LEAVE A REPLY