பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்

0
99

Basil rதிவி நெகுமவில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை எதிர்வரும் 8ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பஷிலுக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக, அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY