பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

0
123

Bus-Ticketing-600x330தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பஸ் கட்டணங்கள் இன்று முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுவிட்டன.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபாயும் ஏனைய கட்டணங்கள் 6 சதவீதத்தால் அதிகரித்தும் அறவிடப்படுகின்றன. 12 ரூபா கட்டணத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஏனைய கட்டணங்கள் ஆறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பயணிகளின் மிகுதிப் பணத்தை வழங்காத பஸ் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY