இந்தியா, நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலி

0
96

160726150452_assam_2953648gஇந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், நேபாளத்திலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் ; பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை காரணமாக நீர்ப்பெருக்கு உயர்ந்த காரணத்தால் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல கிராமங்களையும், வயல்வெளிகளையும் மூழ்கடித்து, லட்சக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரச் செய்தது

அஸ்ஸாம் மற்றும் பீஹார் ஆகிய இந்திய மாநிலங்களில் மீட்புப் பணிக்குழுவினர், மக்களைச் சென்றடைய படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நெடுஞ்சாலைகளிலும், மேட்டுப்பாங்கான பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY