பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பலி

0
120

201607312355597027_55-killed-across-Pakistan-since-the-monsoon-rains-started-in_SECVPFபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தபாய் என்ற பகுதியில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டது.

இதில் வேனில் இருந்த 18 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 28 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 55 பேர் பலியாகி உள்ளதாகவும், 35 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY