புல்மோட்டை மூதூர் பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

0
113

(M.T. ஹைதர் அலி/அகமட் இர்ஷாத் )

6b28b8a3-03d9-4943-9a48-02188bdde967திருமலை மாவட்டத்தின், தோப்பூர், மூதூர், புல்மோட்டை மற்றும் இறக்ககண்டி ஆகிய பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நீர் வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சருமான கௌரவ. ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 2016.07.31ஆந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகல்வில் கிழக்கு மாகாண முதல்மைச்சர் கௌரவ. ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நசீர், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. எம்.எஸ். தௌபீக் மற்றும் எம்.ஐ.எம். மன்சூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாகிர் முன்னால் பிரதேச சபை தவிசாளர்களான ஏ.பி. முபாரக் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தோப்பூர் பிரதேச அபிவிருத்தி…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆயுர்வேத மத்திய மருந்தகம் அமைப்பதற்காக 5.5 மில்லியன் ரூபாவும்.

மூதூர் பிரதேச அபிவிருத்தி…

வைத்திய நிபுணர்களுக்கான விடுதி அமைப்பதற்காக 18 மில்லியன் ரூபாவும்.

தக்வா நகரில் புதிய ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கான அடிக்கல் நடுவதற்காக 70 மில்லியன் ரூபாவும்.

மூதூர் தள வைத்தியசாலைக்கான தாதியர் விடுதி கட்டிடம் அமைப்பதற்கு 30 மில்லியன் ரூபாவும்.

மூதூர் தள வைத்தியசாலைக்கான கழிவு பொருட்களை எரித்து அகற்றும் இயந்திரத்திற்காக 5.6 மில்லியன் ரூபாவும்.

7ef8cf32-5274-4ec5-a411-7b011b0e8b02இறக்ககண்டி பிரதேச அபிவிருத்தி…

இறக்ககண்டி அல்-ஹம்றா விளையாட்டு மைதானம் புனரமைப்புக்காக 02 மில்லியன் ரூபாவு செலவில் அடிக்கல் நாட்டு வைபவம்.

புல்மோட்டை பிரதேச அபிவிருத்தி ...

புல்மோட்டை ரகுமான் நகர் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய மருந்தக திறப்பு விழா.

புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான நோயாளர் கட்டிட விடுதி 30 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் திறந்து வைப்பு.

தள வைத்தியசாலைக்கான தாதியர் விடுதிக்காக 39 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல் நாட்டு நிகழ்வு.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிராமிய திணைக்களத்தால் பட்டிக்குடா வீதி புனரமைப்புக்கு 8.5 மில்லியன் ரூபா பெறுமதியில் வேலைகளுக்கான அங்குரார்ப்பண வைபவம்.

போன்ற வேலைத்திட்டங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நீர் வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சருமான கௌரவ. ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

7494320e-e83a-438a-a30e-fffec26b86f9

d0c3de11-6473-498f-b52a-c290a40e98a2

f205d7df-8174-4256-aecf-5bef6a424a06

LEAVE A REPLY