வக்பு சொத்துகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துக: கல்ஹின்ன மத்ரஸாவிற்கு திணைக்களம் உத்தரவு

0
269

vakbu Vakfuகல்­ஹின்னை ஜாமி­யதுல் பத்தாஹ் அரபுக் கல்­லூ­ரியின் வக்பு சொத்­தான காணி­யொன்று துண்­டா­டப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக காணியை வக்பு செய்த குடும்­பத்­தினர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து திணைக்­களம் வக்பு சொத்து விற்­பனை செய்­வதை உடன­டி­யாக நிறுத்­தும்­ப­டியும் இது சம்­பந்­த­மாக இன்று திங்­கட்­கி­ழ­மைக்குள் அறிக்கை சமர்ப்­பிக்­கும்­ப­டியும் அரபுக் கல்­லூரி அதி­பரை வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம். ஸமீல் MRCA/ 13/1/AC 25 ஆம் இலக்க 2016.07.22 திக­தி­யிட்ட கடிதம் மூலம் இவ்­வுத்­த­ர­வினை விடுத்­துள்ளார்.

இந்த வக்பு காணி விற்­பனை தொடர்­பாக முறை­யான விசா­ரணை நடத்தி தீர்­மா­ன­மொன்­றுக்கு வரும்­வரை காணி விற்­ப­னைக்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் மேற்­கொள்ள வேண்­டா­மெ­னவும் இவ்­வி­டயம் தொடர்­பாக அறிக்­கை­யொன்­றினை கடந்த 2015.11.06 ஆம் திக­திக்கு முன் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்தும் இது­வரை எவ்­வித அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் இக் கடி­தத்தில் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.எச்.எம். ஸமீல் குறிப்­பிட்­டுள்ளார்.

கல்­ஹின்னை ஜாமி­யதுல் பத்தாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு இரண்டு ஏக்கர் தேயிலைத் தோட்டம் கல்­ஹின்­னையில் 1989 ஆம் ஆண்டு வக்பு செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­காணி மர்ஹூம் எம்.எச்.எம். ஜலால்­தீ­னினால் வக்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

இக்­காணி வரு­மானம் குறைவு எனக் காரணம் காட்டி விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வக்பு செய்­யப்­பட்­ட­வரின் குடும்ப உறுப்­பி­ன­ரான கல்­ஹின்னை, கண்டி வீதி, 257/2 ஆம் இலக்­கத்தைச் சேர்ந்த எச்.எம். பவ்மி திணைக்­க­ளத்­துக்கும் வக்பு சபைத் தலை­வ­ருக்கும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்­ச­ருக்கும் ஏற்­க­னவே பல முறைப்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

வக்பு சபைக்கு 2015 அக்­டோபர் மாதம் 5 ஆம் திகதி முறைப்­பா­டு­களை முன்­வைத்தும் வக்பு சபை இன்­று­வரை எது­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். இவ்­வ­கை­யான முறைப்­பாடு மீண்டும் 2016.01.09 ஆம் திகதி வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கவும் எச்.எம். பவ்மி தெரி­வித்­துள்ளார்.

முறைப்­பா­டுகள் அனைத்தும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்­ள­துடன் அதற்­கான அஞ்சல் பதிவு இலக்­கங்­க­ளையும் கடி­தத்தின் பிர­தி­க­ளையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

குறிப்­பிட்ட வக்பு சொத்­தான காணி பெக்கோ இயந்­திரம் மூலம் துண்­டா­டப்­பட்டு காணியின் நடுவில் பாதை இடப்­பட்டு தற்­போது விற்­பனை நட­வ­டிக்­கைகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும் பிற சம­யத்­த­வர்­க­ளி­டமும் விற்­ப­னைக்­கான முற்­பணம் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ் அரபுக் கல்­லூரி திணைக்­க­ளத்தில் MRCA/13/ 1/ AC/ 25 ஆம் இலக்­கத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் 1995 ஆம் ஆண்­டி­லி­ருந்து இக்­கல்­லூ­ரியின் டிரஸ்டி நிய­மனம் முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 2016.01.07 ஆம் திக­தி­யிட்ட கடிதம் மூலம் உறுதி செய்­துள்­ளது.

வக்பு செய்­யப்­பட்ட காணியின் உறு­தியில் அக்­கா­ணியை எவ­ருக்கும் விற்­கவோ கைமாற்­றவோ முடி­யா­தென தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த வக்பு காணியை எமது சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் விலை கொடுத்து வாங்கி காணியை சீர்­ப­டுத்தி துண்­டாடி அதிக விலைக்கு விற்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக வக்பு செய்த குடும்ப உறுப்­பினர் எச்.எம். பவ்மி தெரி­வித்துள்ளார்.

வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம். எம். யாஸீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­வாறு வக்பு சபைக்கு அனுப்­பப்­பட்ட கடி­தங்கள் எதுவும் என்னை வந்து சேர­வில்லை. கடிதம் கிடைத்­தி­ருந்தால் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்பேன் என்றார்.

முறைப்­பாட்­டுக்­காரர் காணியின் உறு­தியின் பிரதி, வக்பு சபைத் தலைவர், திணைக்­களப் பணிப்­பாளர் மற்றும் அமைச்சர் ஹலீ­முக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தங்­களின் பிர­தி­களை ஊடகங்களுக்கு சமர்ப்­பித்­துள்ளார்.

#Vidivelli

LEAVE A REPLY