செல்பி மோகத்தால் நீரில் மூழ்கி பலியான தேசிய தடகள வீராங்கனை

0
144

201607311656574631_National-athlete-drowns-while-taking-selfie_SECVPFஉத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது தடகள வீராங்கனை மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இவர் தனது திறமையால் SAI -யின் முன்னணி வீராங்கனையாக உருவாகினார். ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடியுள்ள இவர், டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார். தற்போது காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ‘சாய்” முகாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு மழை நீரை சேமித்து வைக்கும் குளத்தின் வடிகால் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

இதுகுறித்து போபால் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடக்க விசாரணையில் இது ஒரு விபத்து என்று அவர்கள் தெரித்துள்ளனர். மேலும், சாய் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சாய் முகாமில் சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘பூஜா குமாரிக்கு நன்றாக நீச்சல் அடிக்க தெரியாதால் அவரால் தன்னை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவருடன் மேலும் இரண்டு வீராங்கனைகளும் சென்றிருந்தார்கள். அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. அவர்கள் ஹாஸ்டலுக்கு ஓடிவந்து உதவி கேட்டுள்ளனர். ஆனால், அதற்குள் பூஜா உயிரிழந்துவி்ட்டார். சிறந்த தடைதாண்டி ஓடும் வீராங்கனைக்கு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறினார்.

செல்பி மோகம் ஒரு சிறந்த வீராங்கனையின் உயிரை பறித்தது அந்த முகாமில் பெரிய சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY