காத்தான்குடியின் நன் மதிப்புக்கு அரசியல், மார்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் இனைந்து செயட்டபட முன்வருமாறு பிர்தௌஸ் நளீமி அழைப்பு

0
200

(விசேட நிருபர்)

DSCN7923காத்தான்குடியின் நன் மதிப்புக்கு அரசியல், மார்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் இனைந்து செயட்டபட முன்வருமாறு அழைப்பு விடுப்பதாக எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

காத்தான்குடி சமூகம் எனப்படும் வட்சப் குழுமத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (29.7.2016) மாலை காத்தான்குடி கடாபி ரெஸ்ரூரண்ட் ஹேட்டலில் நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி சமூகம்; வட்சப் குழுமத்தின் ஆலோசகர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தொடர்ந்து அதில் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் நாம் நமது காத்தான்குடியின் பொதுவான நன்மைக்காக பலதரப்பட்ட வழிகளிலும் உழைத்துள்ளோம்.

அன்று சகோதரர் றிஸ்வி மற்றும் றஹீம் மௌலவி அல்பா நசார் உள்ளிட்ட பலரும் ஒன்றாக இணைந்து இந்த காத்தான்குடியின் பொது நலனுக்காக பாடுபட்டோம்.

காத்தான்குடியின் பொதுவான நன்மையின் பொருட்டு அரசியலுக்கப்பால் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் அதற்காக அரசில் வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும்.

DSCN7913போதைப் பொருள் பவனையிலிருந்து அதற்கு அடிமையானவர்களை மீட்பதுடன் போதைப் பொருளை நமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்காக நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறான பொது வான சமூகம் நலன்சார்ந்த விடயங்களில் நம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்;களுக்கு புனர்வாழ்வளிப்பது போன்ற விடயங்கள் நீண்ட கால வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஒருவருட திடட மொன்றை தயாhரித்துள்ளதாகவும் கூறினார்.

காத்தான்குடி சமூகம் எனப்படும் வட்சப் குழுமத்தின் நிருவாக பணிப்பாளரும் அதன் பதிவேற்றுனருமான ஏ.எம் பர்சாத் இங்கு கருத்து தெரிவிக்கையில் பிரிந்து கிடக்கும் காத்தான்குடியின் ஒற்றுமையை அரசியல், மார்க்க வேறுபாடுகளை தான்டி ஒற்றுமையாக பயணிக்க வேண்டி தேவை நம் அனைவருக்கும் உண்டு.இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

காத்தான்குடியில் பொதுவான வேலைத்திட்டம் வரும் போது அனைவரும் அதற்காக ஒன்றுபட வேண்டும்.

அந்த வகையில் கடந்த மே மாதம் மேல் மாகாணம் தென் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது காத்தான்குடி சமூகம்; வட்சப் குழுமம் அங்கு கள விஜயத்தினை மேற் கொண்டு உதவி செய்தது.

அதில் சகோதரர் றிஸ்வி அவர்களை அழைத்த போது அவரும் எங்கள் குழுமத்தில் இணைந்து பணியாற்றினார்.

அதில் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமியின் பங்கு பற்றலும் அவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் இருந்தது.

DSCN7908வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நாங்கள் திரட்டிய நிதியிலிருந்து முடியுமான உதவிகளை வழங்கியதுடன் பாதிப்பு தகவல்களை திரட்டியதுடன் வைத்திய முகாம்களையும் நடாத்தினோம் எங்களது அந்த கள விஜயத்தில் விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.

எமது காத்தான்குடி வட்சப் குழுமம் பல தடவைகள் அந்த கள விஜயத்தினை அங்கு மேற் கொண்டது.

அதற்குதிவிய நிதியுதவி வழங்கியவர்கள் ஒத்துழைத்தவர்கள் அனைவருக்கும் எமது குழுமம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது

அதே போன்று அடுத்த வேலைத்திட்டமாக போதை வஸ்த்துப்பாவனை அதிகரித்து வரும் இன்றைய சூழ் நிலையில் அது தொடர்பாக சமூகத்திற்கு குறிப்பாக காத்தான்குடியில் அதன் தாக்கம் குறித்த விழிப்புனர்வு வேலைத்திட்டமொன்றை மேற் கொள்ள வேண்டியுள்ளது.

DSCN7915அதற்காக எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளார். அதனை நாம் நமது காத்தான்குடி வட்சப் குழுமத்தினால் மேற் கொள்ள வேண்டியுள்ளது அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

அத்துடன் வெள்ள அனர்த்தத்தின் போது திரட்டிய நிதி மற்றும் அங்கு மக்களுக்கு செய்த உதவி செலவுகள் போன்றவற்றையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து போதைபொருள் விழிர்ப்புணர்வு தொடர்பாக உயர்அதிகாரிகள் ,சிவில் அமைப்புக்கள்,உலமாக்கள், அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான கலந்துரையால் ஒன்றை செய்வதாக இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இதற்காக எம்.பீ.எம் பிர்தௌஸ் நளீமியின் தலைமையில் ஒரு ஆரம்ப கட்ட குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி சமூகம்; வட்சப் குழுமத்தின் ஆலோசகர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி மற்றும் அந்த குழுமத்தின் ஒருவரான ஹிசாம் மற்றும் எம்.றிஸ்வி உட்பட அதன் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY