கஞ்சாவுடன் வீதியில் நடமாடியவரும் கஞ்சா சுருட்டு வைத்திருந்தவரும் கைது

0
165

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestகஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவரையும் கஞ்சா சுருட்டு வைத்திருந்த மற்றொரு நபரையும் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 22 வயதுடைய இளைஞன் ஏறாவூர் மிச்நகர் கிராம வீதியில் வைத்து 4000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ஏறாவூர் நகர பிரதான வீதியில் கஞ்சா சுருட்டு தன்வசம் வைத்திருந்த 28 வயதான நபரையும் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த நபர்கள் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY