(Poem) பாஷை

0
18

language-header(Mohamed Nizous)

தாயுடன் தமிழில்
சேயுடன் இங்லிஸில்
நோயுடன் அரபில்
Bபாயுடன் உருதில்
பேசுறார் பாஷை.

புட் சிட்டி வந்தால்
புளக்கிறார் இங்லிஸில்.
சிக்கிற grammarஆல்
விக்குவதைப் பார்த்து
மக்கள் சிரிப்பார்.

கட்டாரில் இருந்து
கிட்டத்தில் வந்தோர்
மற்றோருக்கு மத்தியில்
கொட்டுவார் அரபை.
கெட்ட சொற்களை
கட்டாயம் சொல்வார்.

இந்தியாக் ஆளுடன்
இருந்தவர் வந்து
ஹிந்தியும் பேசுவார்
சந்தியில் நின்று.

பொலிஸைக் கண்டால்
முழுசாய் மாறி
தங்களுக்குள்ளும்
சிங்களம் கதைப்பார்.

ஆமா போடுவோர்
அம்மணியைக் கணடதும்
ஊமைப் பாசைக்கு
உடனே மாறுவார்.

கூகிளில் தேடி
கொப்பிய வசனத்தை
தாங்களே சொந்தமாய்
தயாரித்தது போல
ஆங்கில கொமன்டில்
அசத்துவார் சில பேர்

நல்ல விடயத்தை
சொல்லும் சிலபேர்
உள்ள சொற்களில்
உயர்ந்த கடின
சொல்லால் சொல்வதால்
சொல்வது புரியல.
மேற்படி விடயத்தை
மீள் பார்வை செய்து
இலகு பாஷையில்
எழுதினால் செய்தி
நலமாய் அமையும்.
நாடுவார் மக்கள்.

LEAVE A REPLY