காத்தான்குடி, கபூர் வீதியினை செப்பனிட ஷிப்லி பாரூக் நடவடிக்கை

0
143

(M.T. ஹைதர் அலி)

HRS_3371காத்தான்குடி டெலிகொம் வீதியில் அமைந்துள்ள கபூர் வீதியினை செப்பனிடுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வீதியை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேற்று (30) சனிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

மழைக்காலங்களில் இவ்வீதியில் நீர் தேங்கி நிற்கின்ற இடங்களை பார்வையிடுவதற்காக மழை பெய்த பிற்பாடு சென்றதோடு, அவ்வீதியில் வசிக்கும் மக்களிடமும் எவ்வாறு இதனை அமைக்க வேண்டுமென்ற மக்கள் கருத்தையும் கேட்டறிந்து கொண்டார்.

HRS_3356இவ்வீதியையும் இதற்கு பக்கத்திலுள்ள வீதியும் குறைநிறையுடன் செப்பனிடப்படாமல் இருப்பதனை கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன் வைத்த கோரிக்கைக்கமைவாக இவ் இரு வீதிகளையும் முற்றுமுழுதாக செப்பனிடுவதற்கு 20 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வீதியினை செப்பனிடுவதற்காக ஆரம்ப நிகழ்வு 2016.08.03ஆந் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளதோடு, இவ்வீதி செப்பனிடப்படாமல் காணப்பட்டதனால் இதுவரை காலமும் பல சிரமங்களை எதிர் நோக்கி வந்த இவ்வீதியில் வசிக்கும் மக்கள் அதிலும் குறிப்பாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் என பலர் பிரயோசமடைவார்கள்.

HRS_3343

LEAVE A REPLY