6 மாதம் ஓய்வு எடுக்கும் முஸ்டாபிஜூர் ரஹ்மான்

0
98

201607302148074852_Mustafizur-faces-six-month-lay-off-due-to-shoulder-injury_SECVPFஇந்தியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் அறிமுகமான முஸ்டாபிஜூர், அந்த தொடரை வங்காள தேசம் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். இதில் இருந்து வங்காள தேச அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.

தனது அபார பந்து வீச்சால் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு தேர்வானார். இவரது பந்து வீச்சின் காரணமாக வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி கோப்பையை வென்றது.

அதன்பின் இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியான சசக்ஸ் அவரை ஒப்பந்தம் செய்தது. ஐ.பி.எல். தொடரின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சசக்ஸ் அணியில் இணைவது காலதாமதமானது. பிறகு காயம் குணமடைந்து சசக்ஸ் அணியில் இணைந்த அவர் முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

மேலும் ஒரு போட்டியில் விளையாடிய அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் மற்ற போட்டிகளில் இருந்து விலகினார்.

தற்போது அவருக்கு ஆபரேஷன் செய்ய வங்காள தேசம் முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் ஆபரேஷன் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த ஆபரேஷனைத் தொடர்ந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் 6 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY