வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேனுக்குள் சிக்கி 26 பேர் பலி

0
147

201607301934219725_26-killed-as-floods-hit-van-carrying-wedding-party-in-Pak_SECVPFவடமேற்கு பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. குறிப்பாக கைபர் பாக்துன்க்வா மாகாணம் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாரா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பசார் ஜாகா கெல் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக இன்று ஒரு வேனில் சென்றுகொண்டிருந்தனர். தபாய் பகுதியில் சென்றபோது திடீரென கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அந்த வேன் அடித்துச் செல்லப்பட்டது. வேனுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதில் 18 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 55 பேர் பலியானதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY