மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு

0
141

201607302057325804_30-killed-36-injured-in-lightning-in-Odisha_SECVPFஇந்தியாவில்  ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் எட்டு பேர் பாத்ராக் மாவட்டத்தையும், ஏழு பேர் பலசோர் மாவட்டத்தையும், ஆறு பேர் குர்தா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

படுகாயம் அடைந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.

LEAVE A REPLY