17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இலங்கை

0
168

sri-lanka-mஇலங்கை அணி 17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் 106 ஓட்டங்களை வெற்றி கொண்டு இந்த சாதனையைப் படைத்துள்ளது.

போட்டியின் வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 161 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

1999 ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றை இலங்கை அணி வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY