திருமணத்துக்கு சென்ற வாகனம் அடித்துச் சென்றதில் 20 பேர் பலி

0
88

201607292310581681_Nearly-80-Killed-In-Landslides-And-Floods-Across-Nepal_SECVPFபாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் அடித்து செல்லப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் வடக்கு பகுதியான தபை-யில் பெய்த கனமழையினால், ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், அந்த வழியாக திருமணத்திற்கு சென்ற வேன் ஒன்று அடித்து செல்லப்பட்டது. அதில் பயணித்த 8 பெண்கள், 10 ஆண்கள், 2 குழந்தைகள் என 20 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டு அருகேவுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY