காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி, புணர்நிர்மானம் மற்றும் வைத்திய விடுதிகளுக்கான ஆரம்ப நிகழ்வு

0
171

(M.T. ஹைதர் அலி)

cc153f0e-6954-4bc0-b00f-34ff66b48b11மட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவு புணர்நிர்மானத்திற்காக 67 இலட்சம் ரூபாவும், வைத்தியர்கள் தங்குமிட விடுதி அமைப்பதற்கு 1 கோடியே 8 இலட்சம் ரூபாவும் கௌரவ. ஷிப்லி பாறூக்கின்  வேண்டுகோளிக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.07.02ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கின்  பங்குபற்றுதலுடன் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரினால் அடிக்கல் நடப்படவுள்ளது.

காத்தான்குடி தள வைத்தியசாலையை அபிவிருத்தி செய்கின்ற தொடர் முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அஹமட்  இந்நிதி ஒதிக்கீடுகளை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கான ஒப்பந்தம் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படவுள்ளது.

LEAVE A REPLY