தொலைதூர விண்வெளி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு 5 மடங்கு அதிகம்

0
131

201607301136391708_Apollo-astronauts-at-higher-risk-of-cardiovascular-deaths_SECVPFகடந்த 1968-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டுவரை அமெரிக்கா நாசாவின் அப்பல்லோ விண்கலம் மூலம் சந்திரன் உள்ளிட்ட தொலை தூர விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

24 வீரர்கள் அதன் மூலம் விண்வெளி பயணம் சென்று வந்தனர். விண் வெளியின் வெகு தொலைவில் காணப்படும் கதிர் வீச்சுகள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் டெல்ப் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

அப்பல்லோ விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று வந்த வீரர்கள் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 43 சதவீதம் பேர் இருதய நோய்காரண மாக மரணம் அடைந்துள் ளது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் தொலை தூரத்துக்கு செல்லாத வீரர்களை விட 5 மடங்கு அதிக எண்ணிக்கையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே தொலை தூர விண்வெளி கதிர் வீச்சுக்கு எலிகளை உட்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் எலிகளின் ரத்தக்குழாய்களில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் தொலைதூர விண்வெளி பயணம் மேற் கொள்பவர்களுக்கு அதிக அளவில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி இருப்பதாக பேராசிரியர் மைக்கேல் டெல்ப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY