பாம்பு கடித்தவர் இறுதி சடங்கின் போது உயிருடன் வந்து மீண்டும் உயிரிழந்தார்

0
96

201607301431564699_MP-Man-dies-of-snakebite-wakes-up-at-funeralpyre-only_SECVPFஇந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்(23), அங்குள்ள காட்டுப்பகுதியில் மரக்கட்டைகளை சேகரிக்க சென்றபோது, அவரை பாம்பு ஓன்று கடித்து விட்டது.இதை அறிந்த ஊர் மக்கள் சந்தீப்பை காப்பாற்றுவதற்காக, அங்குள்ள ஒரு மருத்துவரை அணுகியுள்ளனர்.ஆனால் அவரோ சந்தீப் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஊர் மக்கள் அனைவரும் இறந்தவருக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய தொடங்கினர்.ஒருவர் புதைப்பதற்கு குழிதோண்ட, மற்றும் சிலர் அதற்கான சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்ய தொடங்கினர்.

அவ்வாறு செய்யும் போது சந்தீப் முணங்கியதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து, அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அவரை காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் முயற்சிக்கையில், அவரின் உடல் செயலற்று கிடப்பதை பார்த்து, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, சந்தீப்பின் உடலை மருத்துவமனையில் இருந்து வாங்கிசென்ற உறவினர்கள் மீண்டும் அடக்கம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY