யால தேசிய சரணாலயத்தை மூடுவதற்கு தீர்மானம்

0
85

yalaயால தேசிய சரணாலயத்தை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை மூடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியினுள் சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்தை பார்வையிட முடியாதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யால தேசிய சரணாலயத்தினுள் வாழும் விலங்குகளின் பெருக்கத்திற்கு இடமளிக்கும் வகையிலும், சரணாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சரணாலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருடந் தோறும் இந்த காலப்பகுதியில் யால சரணாலயம் மூடப்படுவது வழமையான ஒரு நடைமுறையாகும் என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY