(Poem) தலைமையின் வழமை

0
25

(Mohamed Nizous)

இஸ்லாத்தைப் புகழ்ந்து
இரண்டு வரி பேசு
இஸ்ரேலுக்கெதிராக
இயன்ற மட்டும் ஏசு
இரண்டையும் செய்தபின்
இஷ்டத்துக்கு விளையாடு
முஸ்லிம்கள் யாரும்
மோத வர மாட்டார்.

மீலாத் விழாவுக்கு
மில்லியனை ஒதுக்கு
மீளாத் துயில் கொண்ட
ஆலிம்ஷா ஜனாஸாக்கு
வேளைக்குச் சென்று
விரக்தியாய் உரையாடு.
காலுக்கு கீழாலே
கண்ணி வெடி வைத்தாலும்
வாழ்த்திப் புகழ்வார்
வாழ் நாளில் எதிர்க்கார்.

ஸியாரத்துக்கு அருகினிலே
சிரித்துக் கொண்டு நில்
இயன்ற வரை ஆள் சேர்த்து
இபதார் நடத்து.
வியாபாரம் கல்வியை
வேரோடு நசுக்கினாலும்
உயிரோடு உள்ள வரை
உனை எதிர்க்க மாட்டார்.

பெரு நாளில் காலையில்
பெரிதாய் அறிக்கை விடு
பெருமானார் வாழ்க்கையினை
பின் பற்ற நீ சொல்லு.
உரிமைகளை நசுக்கினாலும்
உள்ளாலே தோண்டினாலும்
அருமையான தலைமையென
ஆனந்தம் கொள்வார்.

கடந்த காலங்களில்
கண்ட காட்சி இது.
நடந்த ஆட்சிகளில்
நடிதத நாடகங்கள்.
படங்கள் மாறினாலும்
பாத்திரங்கள் மாறுவதில்லை.
தொடரும் அவலங்கள்
துடைப்பது மிகக் கடினம்.

LEAVE A REPLY