கலிபோர்னியாவில் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை துவம்சம் செய்த காட்டுத்தீ

0
100

201607301143034548_Crews-battle-to-quell-California-wildfire-near-Big-Sur-coast_SECVPFகலிபோர்னியாவின் பிக் சூர் கடலோரப் பகுதி மற்றும் சான்டா கிளாரிடா சமவெளியை சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 வீடுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சப்பரால் பகுதியில் தற்போது பரவிவரும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், சுமார் 4 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில காட்டுத்தீ பரவி வருவதால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் தீயினால் 50-க்கும் அதிகமான வீடுகள் நாசடைந்தன. தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கனரக வாகனம் திடீரென கவிழ்ந்து விழுந்ததால் அந்த வாகனத்தின் டிரைவர் உயிரிழந்தார்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாழ்படுத்தியது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY