துருக்கியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 35 போராளிகள் பலி

0
65

201607301421421467_Turkey-kills-35-militants-after-they-try-to-storm-base_SECVPFதுருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியான ஹக்காரி மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம்மீது இன்று அதிகாலை ஐம்பதுக்கும் அதிகமான குர்திஸ்தான் போராளிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் 35 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, நேற்று வாகன தணிக்கை மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்மீது குர்திஸ்தான் போராளிகள் அதிரடியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY