கா.பொ.த. (சா/த) சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு

0
183

Balika Schoolகாத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் 2015 ம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதியுயர் சித்திகளைப் பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (30) காலை 9.00 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜ. சேகு அலி, கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எஸ். இஸ்ஸதீன், விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.சீ.எம். பதுறுதீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். தெளபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 2015 ம் ஆண்டு கா.பொ.த. சாதாரணப் பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற 14 மாணவிகளும் 8A, B சித்திகளை பெற்ற 6 மாணவிகளும் நினைவுச் சின்னமும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
Balika School 1

LEAVE A REPLY