துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு

0
99

201607211036095895_Turkey-president-declared-a-state-of-emergency-for-three_SECVPFதுருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அஜர்பைஜானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு அஜர்பைஜானில் உள்ள நீதிமன்றம் ஒன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் அஜைர்பைஜானின் இடையே உள்ள கேந்திர கூட்டுறவை சீர்குலைக்கும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஏ.என்.எஸ் செயல்பட்டதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஏ.என்.எஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்குமுன், துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்காவில் இருந்து செயல்படும் மதகுருவான ஃபெத்துல்லா குலனின் பேட்டியின் முன்னோட்டத்தை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

-BBC-

LEAVE A REPLY