நேபாளம்: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

0
25

201607292310581681_Nearly-80-Killed-In-Landslides-And-Floods-Across-Nepal_SECVPFநேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துகொண்டு ஊர்களுக்குள் புகுந்தது.

இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தகோஷி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த ஆற்றில் உள்ள 56 மதகுகளில் 37 திறந்து விடப்பட்டன.

வேகமாக பாய்ந்தோடி வந்த வெள்ள நீரால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சப்தகோஷி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 43 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பியுதன் மாவட்டத்தில் மட்டும் மழை, வெள்ளப் பாதிப்பிற்கு 36 பேர் பலியாகியுள்ளனர். குல்மியில் 7 பேர், பக்லங்கில் 6 பேர், பப்லா மற்றும் ரோல்பாவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY