பொத்துவில் மக்களின் நீண்டநாள் தேவையை நிவரத்தியாக்கிய சுகாதார அமைச்சர் நஸீர்

0
140

-அபு அலா, சப்னி அஹமட்-

35517324-06eb-4cfb-85a9-1fa1fb68ce9aஅம்பாறை, பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றை நிர்மானிப்பதற்காகவேண்டி அந்தக்காணியை அம்மக்களுக்காக விடுவிப்பு செய்துதர வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக அக்காணியை இன்று வெள்ளிக்கிழமை (29) முதலமைச்சர் விடுவிப்பு செய்து அதற்கான கடிதத்தினையும் சுகாதார அமைச்சரிடம் வழங்கி வைத்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இயங்கிவரும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்துக்கு ஒரு நிரந்த இடமில்லாமல் ஆரம்ப காலத்தில் பொத்துவில் கிராமோதைய சுகாதார நிலையத்தில் இயங்கி வந்தது. பின்னர் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் இன்றுவரைக்கும் இயங்கிவருகின்றது. இந்தக் காணியை பொத்துவில் பிரதேச மக்களின் நலனுக்காகவும் அவர்களின் சுகாதார நலனுக்காகவும் விடுவித்துதர வேண்டும் என்றும் இக்காணியில் குறித்த ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு விட்டுத்தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டமைக்கு அமைவாகவே அந்தக்காணியை முதலமைச்சர் விடுவித்து அதற்கான அனுமதிக் கடிதத்தினையும் வழங்கினார்.

பொத்துவில் பிரதேச மக்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அந்த எதிர்பார்ப்பையும், தாகத்தையும் பற்றி முதலமைச்சருடன் மிகத் தெளிவாக சுகாதார அமைச்சர் நஸீர் எடுத்துரைத்த பின்னரே, குறித்த இடத்தில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை அமைப்பதற்காகவேண்டி பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய காணியை முதலமைச்சர் விடுவிப்பு செய்து அம்மக்களின் நீண்டநாள் எதிர்பார்பையும், தாகத்தையும் தீர்த்து வைத்தார்.

LEAVE A REPLY