பாகிஸ்தான் வீரர்கள் யூனிஸ்கான், மிஸ்பா, ஹபீஸ், ஆமிர், யாசீர் ஷாவிற்கு ஓய்வு

0
180

201607291611171635_Pakistan-resting-Younis-Khan-Misbah-Hafeez-Sarfraz-Amir_SECVPFபாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தானும், ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. 3-வது போட்டி வருகிற 3-ந்தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கு முன் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் அணி முடிவு செய்தது. அந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது. இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் அனுபவ வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டியில் இடம்பிடித்த யூனிஸ்கான், மிஸ்பா, ஹபீஸ். சர்பிராஸ், ஆமிர் மற்றும் யாசீர் ஷா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் அசார் அலி அணியை வழிநடத்திச் செல்கிறார். மொகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.

LEAVE A REPLY