(Poem) சிரிப்புப் பிரச்சினைகள்

0
22

(Mohamed Nizous)

இலகுவிலும் இலகுவாய்
இருக்கின்ற காரியத்தை
உலகமகா யுத்தம் போல்
உருவாக்கி பெரிதாக்கி
கலகங்கள் செய்வார்
கண்மணிகள் சிலபேர்.

கரப்பான் குஞ்சொன்று
காலுக்குள் ஓடும்
ஹிரோஷிமா குண்டுபோல்
கிலி பிடித்து அழுவார்
நெருப்புத்தான் பிடித்ததென
நினைத்தோடிப் பார்த்தால்
கரப்பத்தான் வந்ததென்று
கடும் பயத்தில் சொல்வார்.

பிள்ளைக்குப் பேர்வைக்க
பின் லேடன் பெயர் முதலாய்
உள்ள பெயெரல்லாம்
ஒவ்வொன்றாய் ஆராய்வார்.
‘இல்லாத’ பெயராக
‘இருக்க’ வேண்டும் பெயரென
சொல்லுகின்ற லொஜிக் இன்னும்
சுத்தமாய் புரியவில்லை.

படிக்கிற வகுப்பினிலே
பாடத்து வாத்தியார்
அடிக்கத் தேவையில்லை
அச்சுறுத்தல் போதும்
வடிக்கும் கண்ணீரை
வாய்க்காலால் ஓட்டி
செடிக்கு விட்டால்
செழிப்பாய் வளரும

கண்ணாடி முன்னாடி
கன்னேரம் நின்று
கண்ணோரம் இருக்கின்ற
கருப்பினைப் பார்ப்பார்.
பின்னாடி அது பற்றி
பிறருடன் பேசி
என்னாடி பண்ணலாம்
என்று ஆலோசிப்பார்.
சின்ன பிரச்சினைக்கும்
சிந்திப்பார் பலமாய்.

சின்ன சின்ன விஷயத்தை
சீரியஸாய் ஆக்குவதில்
கண்மணிகள் சிலபேர்
காட்டுகிற கரிசனையால்
உண்மையிலே சிரிப்பு வரும்
ஒரு நேரம் கோபம் வரும்.

LEAVE A REPLY