கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் பலி

0
126

201607291411129190_9-labourers-killed-15-injured-in-Pune-building-collapse_SECVPFஇந்தியாவில்மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள பலேவாடி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 14 மாடி கட்டிடத்தின் மேல் தளம் இன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் பலியாகினர். 15-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

அங்கு பணியாற்றிவந்த தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வேலை செய்து வந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில் காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY