புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் தொழினுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

0
37

(M.T. ஹைதர் அலி/ அகமட் இர்ஷாத் )

a3218c99-59a8-47ad-bd32-499481f9a930மத்திய அரசாங்கத்தினூடாக திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை முஸ்லிம் மத்திய கால்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கெளரவ தண்டாயுதபாணி, மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 29.07.2016ஆம் திகதி (இன்று) காலை 10.30 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு ஏனைய அதிதிகளாக திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. விஜேந்திரன், குச்சவெளி கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. செல்வநாயகம், புல்மோட்டை வைத்திய பொறுப்பதிகாரி சுதாகர், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.பி. தௌபீக்,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம். சல்மான் பாரீஸ், எம்.ஐ. பதுருதீன் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்..

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பாக மாகாண சபையில் அடிக்கடி பிரேரணைகளை முன்வைத்து கல்வி அமைச்சர் மற்றும் வலைய கல்வி அதிகாரிகளோடு முரண்படுவது எந்த தனிநபர் முரண்பாடுகளும் கிடையாது.

பிரதேச பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றும்படி கோருவதை அமைச்சர் ஒருபோதும் முரண்பாடாக கருதமாட்டார் அத்துடன் எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டிப்பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கணிதம் விஞ்ஞனம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்காக சுமார் 1134 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளீர்க்கபட்டு நியமிக்கப்பட உள்ளார்கள். குறித்த நியமனத்தின் போது குச்சவெளி கோட்டம் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் அத்தோடு பௌதீக வளங்களையும் நிவர்த்தி செய்யகோரி அமைச்சரிடம் பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளேன்.

மேலும் எமது பிரதேசத்தில் குறைந்த வளங்களை கொண்டு க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை போன்றவற்றில் நல்ல பெறுபேறுகளை எம்மாவட்ட மாணவர்கள் பெற்றுள்ளார்கள். தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனூடாக மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைக்கக்கூடிய மாணவர்கள் எமது மாணவர்கள் அதனால் எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கல்வியில் உயர்த்த ஏதுவாக இருக்கும் என தனதுரையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பேசுகையில்…

மாவட்டத்தின் கல்வி வளர்க்கப்படவேண்டும் ஆசிரயர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மேலும் ஆசிரயர் இடமாற்றம் முறையாக இடம்பெறவேண்டும் வட்டார எல்லை பிரிப்பு குறித்து தாம் அவதானமாக இருப்பதாகவும் உரிமைகள் குறித்து மாவட்ட குழு கூட்டத்தில் கல்வி அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூரண ஒத்துழைப்பை தருவதை தான் நினைவு படுத்தினார்.

தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சர் பேசுகையில்…

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்கள் பிரதேச மற்றும் மாவட்ட கல்வி தொடர்பாக மாகாண சபையில் பிரேரணைகளை பல முறை முன்வைத்து பேசினார் என்னோடும் பல முறை முரண்பட்டது குறித்த நான் பிழையாக கருதவில்லை. அது நியாயமான கோரிக்கை என்பதை நான் அறிவேன் அத்துடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி விடயத்தில் தியாகத்துடன் செயல்படவேண்டும் மாணவர்களை தூண்டிவிட்டு வீதிகளில் போராட்டங்களை ஏற்படுத்துவது முறையற்றது அவைகள் பக்குவமாக கையாள வேண்டுமென தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் வேண்டுகோள்களை நான் சரியானது என புரிந்து கொண்டேன் குறித்த ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்னும் ஓர் இரு மாதங்களுக்குள் அன்வர் அவர்கள் குறிப்பிட்டது போன்று பாட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியற்கலூரியிரில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களோடு சேர்த்து நியமிக்கப்படுவர் என வாக்குறுதியளித்தார்.

LEAVE A REPLY