உடற்பயிற்சி செய்யாததால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் மரணம்: புதிய ஆய்வில் திடுக்கிடும் தகவல்

0
88

guy-stretching-gymஉடற்பயிற்சி செய்யாததால் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 67.5 பில்லியன் டாலர் சிகிச் சைக்காக செலவிடப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் இறப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மெலடி டிங் தலைமையிலான ஆய்வாளர் கள், பத்து லட்சத்துக்கும் மேற்பட் டோரின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்துள்ளனர். இதில், உடற் பயிற்சி செய்யாததால் இதய கோளாறு, பக்கவாதம், நீரிழிவு, மார்பக புற்றுநோய், குடல் புற்று நோய் ஆகிய 5 பெரிய நோய் களால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு சிகிச்சை பெற ஆண்டுதோறும் 67.5 பில்லியன் டாலர் செலவிடப் படுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்யாததால் 50 லட்சம் பேர் இறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இவர்களது ஆராய்ச்சி முடிவு கள் ‘தி லான்செட்’ இதழில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ‘நார்வீஜியன்ஸ் கூல் ஆப்ஸ்போர்ட்ஸ் சயின் ஸஸ் அண்ட் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடி’ பேராசிரியர் உல்ப் எக்லண்ட் கூறும்போது, “உடற் பயற்சி இல்லா ததால் சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் செலவாவது டன், உற்பத்தித் திறனும் பாதிக் கப்படுகிறது. ஆனால், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் பெரும்பாலான பிரச்சி னைகளில் இருந்து தப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர். அதேநேரம் உற்சாக மான நடை உட்பட உடற்பயிற்சிகள் முன்கூட்டியே வரும் இறப்பை தடுக்கின்றன.

புகை பிடிப்பதால் மட்டும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறப் பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஏறக்குறைய அந்தள வுக்கு உடற்பயிற்சி இல்லாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை உள்ளது. இதுகுறித்து பேராசிரி யர் உல்ப் எக்லண்ட் கூறும்போது, “வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது கூட போதாது.

உலகளவில் ஆண்களில் 4-ல் ஒருவர் அந்தளவுக்கு கூட உடற் பயிற்சி செய்வதில்லை. உடற் பயிற்சிக்காக விளையாட்டில் ஈடுபட வேண்டும் அல்லது உடற் பயிற்சி கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் கிடை யாது. தினமும் ஒரு மணி நேரம் சாதாரண உடற்பயிற்சிகள் செய் தாலே போதும். மணிக்கு 5.6 கி.மீ. தூரம் நடைப்பயிற்சி, மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் வேண்டும்” என்கிறார்.

LEAVE A REPLY