உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்

0
126

201607291131043379_Usain-Bolt-the-worlds-fastest-runner_SECVPFஜமைக்காவை சேர்ந்த 30 வயதான உசேன் போல்ட் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக திகழ்கிறார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.69 வினாடியில் கடந்து சாதனை படைத்து தங்கம் வென்றார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் 19.30 வினாடியில் கடந்து சாதனை புரிந்து தங்கம் வென்றார். அதோடு 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார்.

2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்திலும், 200 மீட்டர் ஓட்டத்திலும் தனது ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடியிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடியிலும் கடந்து உசேன் போல்ட் புதிய உலக சாதனை புரிந்து இரண்டிலும் தங்கம் வென்றார். இதன்மூலம் உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை மற்றும் தங்கம் வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் உசேன் போல்ட் ஆதிக்கம் செலுத்தினார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.63 வினாடியில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கிலும் 3 தங்கம் (100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம்) வென்றார். ஒலிம்பிகில் அவர் மொத்தம் 6 தங்கம் வென்றுள்ளார்.

பிரேசில் ஒலிம்பிக் போட்டி உசேன் போல்டுக்கு சவாலாக இருக்கலாம். ஆனாலும் அவரால் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியும் எஎற நம்பிக்கையில் உள்ளார்.

LEAVE A REPLY