(Photos) இனந்தெரியாத நபர்களினால் லொறி தீக்கரை

0
22

(எம்.எம்.ஜபீர்)

2ab17ee5-25d3-449f-a2ea-64e613370197நாவிதன்வெளி 15ஆம் கொளனி பிரதேசத்தில் இன்று (29) வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கடையொன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ராட்டா ரக லொறி, இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவிதன்வெளி 15ஆம் கொளனியை சேர்ந்த பீ.தயாபரன் என்பவரின் ராட்டா ரக லொறி நேற்று இரவு நெல் ஏற்றி சென்று விட்டு அவரின் கிருமிநாசினி கடைக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் அதிகாலை 4.00 மணியலவில்லொறி தீப்பிடித்து எரிவதாக தொலைபேசி மூலம் லொறி உரிமையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த இடத்துக்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி உரிமையாளர் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

38443cd0-77e2-45c2-925b-c837a02fa890

adf92537-19fa-4c75-844e-ba44e22e16c9

c399fda1-4542-4e79-b19d-138c9a11d36a

LEAVE A REPLY