கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைள் நிறுவகத்திற்கு முன்னாள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
135

(விசேட நிருபர்)

ae0186b0-1a96-4b88-a745-33e843f5a91aபல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து கிழக்குப் பல்லைக்கழக ஊழியர்கள் இன்று (29.7.2016) வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைள் நிறுவகத்திற்கு முன்னாள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க் செய்ய வேண்டும் பல்கலைக்கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வயதாக உயர்த்தி அதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிழக்குப் பல்லைக்கழக வந்தாறுமூளை வளாகம் மற்றும் ம்டக்களப்பு வளாகம், மற்றும் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைள் நிறுவக வளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும்; பல்கலைக்கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வயதாக உயர்த்தி அதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான காப்புறுதி திட்டத்தினை அமுல் நடாத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாங்கள் மன் வைத்து இந்த போராட்டத்தில் குதித்துள்ளோம் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றேம் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இப்படியான போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜசேகரன் தெரிவித்தார்.

0a301d43-7889-453e-82a3-8ad1452d3026

2c29b511-0ec1-4166-82c9-98d9d639cc4f

23ac3cb9-f345-48ac-8117-a5e4a985aa33

803e0653-e030-4587-b386-0accc1d9d994

cef999b8-7089-473a-b954-69d769dbb991

cf0c3d5a-8a11-4bca-92ee-3c35b6d80f9d

eacc20de-fb81-427f-969f-c18b5075a3d5

LEAVE A REPLY