21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை வழங்கும் நிகழ்வு

0
84

(சப்னி அஹமட்)

dc079eba-3f3a-47c0-bdac-4a7bc21c95f1புதிதாக நியமனம் பெற்று வந்த 21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் வழங்கி வைத்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம் அலாவுடீன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 08 வைத்தியர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 06 வைத்தியர்களும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், இறக்கமாம் பிரதேச வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், தீகவாபி பிரதேச வைத்தியசாலைக்கு 01 வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடமையாற்றும் வைத்தியசாலைகளின் கடிதங்களை பெறுப்பெற்ற வைத்தியர்கள் தங்களின் கடமைகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வேண்டிக்கொண்டார்.

LEAVE A REPLY