ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும் நிகழ்வு

0
139

(வாழைச்சேனை நிருபர்)

24825584-7c4b-492e-af35-d04d790b967fஅமீர் அலி பவுண்டேஷனின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும்  நிகழ்வு  நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு இடம் பெற்றது.

அமீர் அலி பவுண்டேஷனின் தலைவரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த பதினைந்து அதிபர்களுக்கும் நினைவு பரிசு பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம். அஷ்ரப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஆர். றிஸ்மியா பானு, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். கலீல் றகுமான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

4d72645b-7067-49d6-be94-b886faf24e33

13fd1704-3f32-4736-b92d-60518df937eb

788c6416-480f-489a-a33b-1dbd16a3819d

bfdfe0c6-2e6a-4842-8203-24b6dd8cdac6

dc450489-a372-46b1-a100-594db0619005

LEAVE A REPLY