நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உட்பட 13 பேர் உயிரிழப்பு

0
190

201607290559185460_Former-Nepal-minister-among-13-killed-in-bus-accident_SECVPFநேபாளம் நாட்டின் கிழக்கு தான்குடா மாவட்டத்தில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. சிதுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக சிதறியது.

அந்த பேருந்தில் சுமார் 50-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். சுமார் 60 ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஒருவர். அவர் தன்குடா மாவட்ட சிபின் மாவோயிஸ்ட் கட்சி சேர்மன் ஹர்ராஜ் கேவா என்பவர் ஆவார். மேலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY