கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவினால் காது கேட்கும் கருவி வழங்கி வைப்பு

0
164

(வாழைச்சேனை நிருபர்)

bd773fa2-32fd-42d8-af2b-b4f108695094கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவினால் காது கேட்கும் கருவியொன்று பயனாளி ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சமூக சேவைத்திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் செம்மண்னோடை கொண்டயன்கேனி முஸ்லிம் கிராமத்தைச்சேர்ந்த மீராலெப்பை அஹமது லெப்பை என்பவருக்கே காது கேட்கும் கருவி வழங்கி வைக்கப்பட்டது.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். அல் அமீன், சமூக சேவை உத்தியோகத்தர் எம். அலியார் ஆகியோர் கலந்து கொண்டு காது கேட்கும் கருவியினை வழங்கி வைத்தனர்.

LEAVE A REPLY