தகவல் அறியும் சட்டமூலம் சபாநாயகர் நாடு திரும்பியதும் கையொப்பமிடப்படும்: அமைச்சர் கயந்த கருணாதிலக

0
206

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC07906தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்தும் பொருட்டு வெளியிடப்பவுள்ள வர்த்தமானி அறிவித்தல் சபாநாயகர் நாடு திரும்பியவுடன் கையொப்பமிடப்படும் என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் முழுமையாக பொது மக்களுக்கு நன்மை தரக்கூடியது சட்டமூலமாகும் இதனை முழுமையாக அமுல்படுத்துவது மக்களை சார்ந்ததாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு நேற்று (27) புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

‘அரச சபையிலிருந்து மக்கள் சபைக்கு’ என்ற தொனிப் பொருளில் அரச, தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, தகவல் திணைக்கள அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

DSC07925நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இலங்கையின் இந்த சட்டமூலம் உலகின் ஏழாவது இடத்தையும், தெற்காசியாவில் இந்தியாவுக்கு பின்னரான பிரதான இடத்தையும் பெற்றுள்ளமை இலங்கை அடைந்துள்ள கௌரவமாகும்.

நாட்டிலே உள்ள ஏனைய சட்டங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கே ஏதுவாக உள்ளன. ஆனால், தகவல் அறியும் சட்டமூலமோ அதிகாரிகள் மீது பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதற்கு உதவுகின்றது.

எனவே, இந்த சட்ட மூலத்தை சரியாக அமுல்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இந்த விடயத்தில் மிக்க பொறுப்பு உள்ளது.

DSC07936தகவல் அறியும் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன் பலாபலன்களை நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் நாடுபூராகவும் உள்ள அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 8000 அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள்.

இவர்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்களிலும் தகவல் அதிகாரிகளாகப் பணியாற்றுவார்கள்.

எனவே, பொது மக்களும், ஊடகவியலாளர்களும் தமக்குத் தேவையான தகவல்களைப் இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

DSC07898இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் கடந்த காலத்திலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அவை தோல்வியில் முடிந்த வரலாறுகள் உண்டு.

உண்மையில் இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு காலஞ்சென்ற ஊடக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா முயற்சி மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டும் இருந்தன.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல் அறியும் சட்டம் மூலத்தின் நன்மைகளைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.

ஏனெனில், மக்களே இந்த சட்டத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்க வேண்டும்.

DSC07895மக்களை அறிவூட்டவேண்டுமென்றால், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள். ஆகையினால் முதன்முறையாக இந்த சட்டமூலம் பற்றிய தெளிவூட்டலை இன்று ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பித்து வைக்கின்றோம்.

மேலும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ, தனிப்பட்டவர்களின் நலன்களுக்கு அபகீர்த்தி ஏற்படுகின்ற வகையிலோ, வைத்திய விடயங்களின் இரகசியத் தன்மைகளைப் பாதிக்கின்றதாகவோ உள்ள விடயங்களை தகவல் அறியும் சட்டமூலத்தைப் பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்ள் சரியான, நம்பகமான தகவல்களை வெளியிடுவதற்கு இந்த சட்டமூலம் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் கவனமாக செயற்பட வேண்டியதை வழியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

DSC07908

LEAVE A REPLY