மோசமான தோல்வியால் 3-வது டெஸ்ட் குறித்து அச்சப்பட தேவையில்லை: இன்சமாம் உல் ஹக்

0
125

201607282123090399_No-need-to-panic-after-Test-defeat-Inzamam_SECVPFஇங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஆனால், ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் மோசமாக தோல்வியை சந்தித்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் அந்த அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர்கள் கடுமையாகச் சாடினார்கள். ஆனால், இந்த மோசமாக தோல்வியால் 3-வது போட்டி குறித்து அச்சப்பட தேவையில்லை என்று பாகிஸ்தான் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் போட்டியி்ல் பெற்ற வெற்றி, வெளிநாட்டு மண்ணில் கடுமையான எதிர் அணிக்கெதிராக பாகிஸ்தான் அணியால் வெற்றி பெறக்கூடிய திறமை உள்ளது என்பதை அனைவருக்கும் காட்டியது.

ஓல்டு டிராஃப்போர்டு போட்டி உண்மையிலேயே நன்றாக அமையவில்லை. இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றதற்காக அதை பாராட்ட வேண்டும். இந்த போட்டி இங்கிலாந்து அணி பலமானது, அதை தோற்கடிக்கப்படி மிகக்கடினம் என்பதை காட்டியது.

2-வது டெஸ்டை நான் பொருட்படுத்தவில்லை, வீரர்கள் இங்குள்ள சூழ்நிலைகளை மேலும் நன்கு பழக்கப்படுத்திக்கொண்டு அவர்களுடைய ஆட்டத்திறளை மேம்படுத்தி, சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

LEAVE A REPLY